அரசாங்கம்

தள்ளிப் போகும் மத்திய அமைச்சரவை மாற்றம்!

மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த மாற்றம் தற்போது மேலும் தள்ளிப் போயிருக்கிறதாம்.

ஜூலை 20 ஆம் தேதிக்கு முன்னதாக நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கும் என எதிர்பார்க்கப் படுவதால், ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அதுவும் தள்ளிப் போயிருக்கிறதாம்.

மத்திய நிதியமைச்சர் பிரான்ஸில் இருப்பதாலும், பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்ய இருப்பதாலும் மத்திய அமைச்சரவை மாற்றம் தள்ளிப் போயிருக்கிறதாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *