சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் “Start Run, Stop Drugs எனும் தலைப்பில் போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டம்” நடைபெற்றது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் இன்று (26.6.2026) சென்னை, காமராஜர் சாலையிலுள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடம் அருகில் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஸ்டாட் Run, ஸ்டாப் Drugs போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து பங்கேற்றார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையின்கீழ், ‘போதைப்பொருள் இல்லாத தமிழகம்’ என்ற இலக்கை நோக்கிய பயணத்தில் அறநெறி சார்ந்த விளையாட்டுக் கலாச்சாரத்தை வளர்த்தெடுப்பதில் தமிழ்நாடு அரசு உறுதிபூண்டுள்ளது. ஜூன் 26-ஆம் நாள் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்களிடையே ஏற்படுத்திடும் வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஸ்டாட் Run, ஸ்டாப் Drugs போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்ட நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கலந்து கொண்டு போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு அறிவிப்பு பலகையில் “Start Run Stop Drugs, Sports-ah Edu Drugs-ah Vidu” என்ற வாசகத்தை எழுதி கையொப்பமிட்டார்.

பின்னர் முதலமைச்சர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாட் Run, ஸ்டாப் Drugs போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து, ஒலிம்பிக் மற்றும் சர்வதேச விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், SDAT விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுடன் ஓட்டத்தில் பங்கேற்றார்.
இந்த போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டம், காலை 6.30 மணிக்கு சென்னை, காமராஜர் சாலையிலுள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் தொடங்கி, தீவுத்திடல் வரை சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்றது. இதில் சுமார் 15 ஆயிரம் நபர்கள் பங்கேற்றனர்.
