அரசியல்

தவெகவில் புதியதாக 5 மாவட்டங்கள்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைப்பு கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கட்சியின் மாவட்ட அமைப்பில் முக்கிய மாற்றங்களை தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். நிர்வாகப் பணிகளை இன்னும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், ஏற்கனவே சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்த கழக அமைப்பில் தற்போது மேலும் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தவெக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நிர்வாக வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் கழக மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏற்கனவே செயல்பட்டு வந்த மாவட்டங்களுடன் இணைந்து புதியதாக பின்வரும் 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம்
திருநெல்வேலி தென்கிழக்கு மாவட்டம்
திருநெல்வேலி மத்திய மாவட்டம்
திருநெல்வேலி வடக்கு மாவட்டம்
திருவண்ணாமலை வடமேற்கு மாவட்டம்

இந்த புதிய மாவட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் முழு விவரங்களை கட்சியின் எக்ஸ் வலைபக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

https://www.dropbox.com/scl/fo/w3uvc48ljnlniyrqc5x0v/AO_PD9HpX94MhMeZjuNa7JM?rlkey=927a55eupvh0nocq4hi52dmvw&e=2&st=75kfq593&dl=0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *