தமிழகத்தைச் சேர்ந்த Phoenix Kothari Footwear நிறுவனம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ₹8,500 கோடி) முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. மேலும், கரூரில் அமைக்கப்பட்டுள்ள அதன் புதிய தொழிற்சாலையில் வரும் ஜூலை 10 முதல் Adidas காலணிகளின் உற்பத்தியை தொடங்க உள்ளது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்ட Kothari Industrial Corporation Limited (KICL) மற்றும் தைவானைச் சேர்ந்த Evervan Group இணைந்து உருவாக்கிய கூட்டு நிறுவனமே Phoenix Kothari Footwear நிறுவனம் ஆகும்.
இந்தத் இணைப்பின் வழியாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 10 கோடி ஜோடி காலணிகளை உற்பத்தி செய்யும் இலக்கை நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இதற்காக சுமார் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்படவுள்ளதாக Kothari Industrial Corporation நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜே. ரபீக் அஹமது தெரிவித்துள்ளார்.
50 ஆயிரம் வேலைவாய்ப்புகள்
கரூரில் அமைக்கப்பட்டுள்ள புதிய தொழிற்சாலை பல கட்டங்களாக செயல்படுத்தப்படவுள்ள நிலையில், இந்தத் திட்டத்தின் மூலம் மட்டும் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் மொத்தமாக 50 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு காலணி உற்பத்தி மையமாக உருவெடுப்பு
Nike, Adidas, Puma, Crocs, New Balance, Reebok உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற பிராண்டுகளுக்கான காலணிகள் தற்போது தமிழ்நாட்டில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாடு, இந்தியாவின் முக்கியமான Non-Leather Footwear தயாரிப்பு உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக பல தைவான் நிறுவனங்களும் தமிழகத்தில் முதலீடு செய்து வருகின்றன.
பெரம்பலூரில் ஏற்கனவே Crocs உற்பத்தி
பெரம்பலூரில் அமைந்துள்ள இந்நிறுவனத்தின் தொழிற்சாலையில் ஏற்கனவே Crocs பிராண்ட் காலணிகள் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தில் நிறுவனம் சுமார் ₹5,000 கோடி முதலீடு செய்துள்ளது. இந்த தொழிற்சாலை, Phoenix Kothari Footwear மற்றும் உலகளாவிய நிறுவனமான Shoetown இணைந்து உருவாக்கிய JR One Footwear என்ற கூட்டு நிறுவனத்தின் மூலம் செயல்பட்டு வருகிறது.
மேலும், இந்நிறுவனம் Kickers பிராண்டின் காலணிகளை இந்தியா உள்ளிட்ட 9 நாடுகளில்ல் உற்பத்தி மற்றும் விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தங்களையும் மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தில் உருவாகும் தொழில் சூழல்
Pou Chen Group, High Glory Footwear India, Dean Shoes (Freetrend), Feng Tay Group, Oasis Footwear உள்ளிட்ட நிறுவனங்களும் தமிழ்நாட்டில் முதலீடுகளை அதிகரித்து வருகின்றன.
இந்த முதலீடுகள் மூலம் கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் Non-Leather Footwear துறையில் ₹12,000 கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
தைவான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து 22-க்கும் மேற்பட்ட காலணி உதிரிபாக உற்பத்தி நிறுவனங்கள் தமிழகத்தில் தங்கள் தொழில்களைத் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு உலகளாவிய காலணி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக மேலும் வலுப்பெற்று வருகிறது.
நன்றி: business standard
