அரசு கார்ப்பரேட்

“உறவை வலுப்படுத்த இந்தியாவில் சீன முதலீடுகள் அவசியம்” சீனாவிற்கான இந்திய தூதர்!

சீனாவில் சிங்குவா பல்கலைகழகத்தில் உலக அமைதி கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற பாதுகாப்பு மற்றும் உலக பொருளாதார மேலாண்மை தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சீனாவிற்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்தியா மற்றும் சீனா இடையிலான வர்த்தக உறவுகள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், இந்தியாவில் சீன முதலீடுகளை அதிகரிப்பது இருநாட்டு உறவுகளுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் பயனளிக்கும் என்று கூறினார்.

இந்தியா மற்றும் சீனா இடையிலான பொருளாதார உறவுகள் சமநிலையுடன் வளர வேண்டியது அவசியம் என்றார். குறிப்பாக, இந்தியாவில் சீன முதலீடுகள் அதிகரிப்பதோடு, இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட தயாரிப்புகளுக்கு சீன சந்தையில் கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீடுகள் பரஸ்பர நன்மையை அடிப்படையாகக் கொண்டு விரிவடையும் போது, இந்தியா–சீனா உறவுகள் மேலும் வலுப்பெறும் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *