அரசு மேலும் சில

CPWD-ஐ கண்டித்து குடியிருப்புவாசிகள் போராட்டம்!

சென்னை கேகே நகரில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் குடியிருப்பை முறையாக பராமரிக்கக் கோரி போராட்டம் நடைபெற்றது.

சென்னை, கே.கே.நகரில் மத்திய அரசு ஊழியர்களின் குடியிருப்பு உள்ளது. இங்கு பல்வேறு துறைகளில் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதிகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு அங்கு குடியிருக்கும் மத்திய அரசு ஊழியர்களால் வைக்கப்படுகிறது.

 

இந்நிலையில் இதனை கண்டித்து குடியிருப்பு வாசிகள் ஒன்று திரண்டு போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்தில் குடியிருப்புகளை முறையாக பராமரிக்காத CPWD நிர்வாகத்திற்கு எதிராக முழக்கமிட்டனர். இந்த போராட்டத்திற்கு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் துரைப்பாண்டியன் தலைமை வகித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *