அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் என அதிகாரத்தில் இருப்பவர்களின் ஊழலை தட்டிக் கேட்பதில் கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் லோக் ஆயுக்தா சுதந்திரமான அமைப்பாக செயல்படுகிறது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் ரெய்டுக்கு செல்லும் முன் அரசு மேலிடத்தில் ஒப்புதல் பெறவேண்டிய அமைப்பாக உருமாற்றி வைத்திருக்கிறார்கள்.
இதனால் இந்த அமைப்பு தமிழ்நாட்டில் நொண்டியடித்துக் கொண்டிருக்கிறது. அதிகாரம் பிடுங்கப்பட்ட அமைப்பாக இருக்கிறது. இதற்கென்று ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி, ஓய்வு பெற்ற ஐஏஸ் எஸ் அதிகாரி என ஒரு விசாரணைக் குழுவே உள்ளது.
தற்போது புதியாக அதிகாரத்திற்கு வந்திருக்கும் தவெக அரசு, கடந்த அரசால் நிறுத்தப்பட்ட நூறுநாள் வேலை திட்டத்தின் மீதான தடையை நீக்கியது போலவே இதில் இருக்கும் தடையையும் நீக்க உள்ளதாம்.
இதனால் விரைவில் சுதந்திரமான ரெய்டுகளை நடத்தும் விசாரணை அமைப்பாக லோக் ஆயுக்தா தமிழ்நாட்டில் உருமாற இருக்கிறதாம்.
