அரசியல்

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்!

அதிமுக முன்னாள் அமைச்சரும், கரூர் தொகுதி எம்.எல்.ஏவுமான எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவரை நேரில் சந்தித்து எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.

கரூர் மாவட்ட அரசியலில் முக்கிய தலைவராக திகழ்ந்து வரும் எம்.ஆர். விஜயபாஸ்கர், அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராகவும் பணியாற்றியவர். இவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தது அதிமுகவுக்கு மேலும் ஒரு சரிவாகப் பார்க்கப்படுகிறது.

எம்.ஆர். விஜயபாஸ்கரின் ராஜினாமாவால் தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் மேலும் குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக அதிமுகவில் இருந்து தொடர்ந்து நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் விலகி வரும் நிலையில், இந்த ராஜினாமா கட்சிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, விராலிமலை தொகுதி எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான சி. விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். அதற்கு முன்பாக மரகதம் குமரவேல், எஸ். ஜெயக்குமார், பி. சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய நான்கு அதிமுக எம்.எல்.ஏக்களும் பதவியை ராஜினாமா செய்து, பின்னர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

இதன் மூலம் அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் தவெகவில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *