தவெக எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசிய விவகாரத்தில் மூளையாக செயல்பட்டவர் சிங்கப்பூர் தொழிலதிபர் லட்சுமண பெருமாள். ஊத்தங்கரை எம்.எல்.ஏ போலீசில் புகார் கொடுத்ததும், அதுவரை சென்னையில் இருந்தவர் தகவல் கிடத்து சிங்கப்பூர் தப்பிவிட்டாராம்.
இது சம்பந்தமாக சென்னை எழும்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் 40 பேர்களுடன் பலநாள் சந்திப்பு நடந்திருக்கிறதாம். இதை அறிந்த போலீஸார் ஹோட்டலுக்கு விசாரணைக்கு போகும் முன்னரே சிசிடிவி காட்சிகளை அழிக்கப் பட்டுவிட்டதாம். இதை செய்யச் சொன்னதில் தொழிலதிபர் லட்சுமன பெருமாளின் பெயர் அடிபடுகிறதாம்.
இதனால் அவர் தொடர்பாக விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாம். இனி அவர் சிங்கப்பூரில் இருந்து திரும்பி வந்தால் ஏர்போர்ட்டிலேயே கைது செய்யப்படலாம். இது மட்டுமில்லாமல், அவரை பிடித்து தமிழ்நாடு காவல்துறையிடம் ஒப்படைக்க சிங்கப்பூர் அரசுக்கு தாக்கீது அனுப்பப் பட்டிருக்கிறதாம். அதேநேரத்தில் டெலிட் ஆன வீடியோவை ரெக்கவர் பண்ணவும் முழு வீச்சில் வேலை நடக்கிறதாம்.
