உள்துறை செயலாளர் மீது முதல்வர் விஜய் தரப்பு வருத்தத்தில் இருக்கிறதாம்.
ஆட்சி மாறியதும் கீழமை நீதிமன்றங்களுக்கு புதிய அரசு வழக்குரைஞர்களை நியமிப்பது வழக்கம். அப்படி நியமிக்கும் போது புதிய வழக்குரைஞர்கள் பதவியேற்கும்வரை பழைய வழக்குரைஞர்கள் வழக்குகளை கவனித்து வருவர். பொதுவாக இந்த நடைமுறைகள் மே மாத கோடை விடுமுறையின்போதே முடிந்துவிடும்.
ஆனால், இந்தமுறை புதிய அரசு வழக்குரைஞர்களை கோடை விடுமுறை காலத்திலேயே நியமிக்கவில்லை. இன்று வரையில் கூட இந்த பதவிகள் முழுமையாக நிரப்பப்படவில்லை. ஆனல் அரசு வழக்குரைஞர்களை 30.06.2026 அன்றே விடுவித்து உத்தரவு வெளியிடப்பட்டுவிட்டது.
இதனால் பல்வேறு நிர்வாக கோளாறுகள் ஏற்பட்டு அதனை இன்னும் சீர் செய்ய முடியவில்லையாம். இந்த விவகாரத்தை முன்கூட்டியே திட்டமிட்டு உள்துறை செயலாளர் மணிவாசன் செயல்பட்டு இருந்தால் இந்த கோளாறுகள் ஏற்பட்டிருக்காது. இதனால் அவர் மீது கோவத்தில் இருக்கிறதாம் தவெக தரப்பு.
