அரசு

ராஜினாமா பிரஷர்..!

தமிழ்நாட்டில், மூன்று பதவிகள் இந்திய அரசியலைமைப்பு சட்ட பாதுகாப்பை பெற்ற பதவிகளாகும். இவர்களை தமிழக அரசின் விருப்பப்படி நீக்க முடியாது.

1.மாநில தகவல் ஆணையர்
2.மாநில அரசுப் பணியாளர் தேர்வாணைய (TNPSC) தலைவர்
3.மாநில தேர்தல் ஆணையர்

மாநில தகவல் ஆணையரின் பதவிகாலம் கடந்த ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்து, அந்த பதவி காலியாக உள்ளது. TNPSC தலைவராக எஸ்.கே.பிரபாகர் தற்போது பதவி வகித்து வருகிறார்.

மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலா சாமி பதவி வகித்து வந்தார். இவருக்கு மார்ச், 2029 வரை பதவி காலம் உள்ளது.

முதலமைச்சராக விஜய் பதவியேற்றதும், ஜோதி நிர்மலா சாமி அவரை நேரில் சந்தித்து பேசினார். அப்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த தயாராகி வருவதாகவும், அதனை நேர்மையாக நடத்தி தருவதாகவும் கூறி இருக்கிறார்.

இந்த நிலையில் அவரை ராஜினாமா செய்யச் சொல்லி மேலிடத்தில் இருந்து அழுத்தம் தருகிறார்களாம். இதற்கு சட்டப்படி சாத்தியமே இல்லையென்று ஜோதி நிர்மலாசாமி தரப்பில் பதில் வந்திருக்கிறதாம். இந்த சம்பவம் ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *